Published : 14 Sep 2015 10:58 AM
Last Updated : 14 Sep 2015 10:58 AM

குடிசைகளற்ற நகரத்தை உருவாக்கும் திட்டம்: தமிழகத்தில் 10 ஆயிரம் வீடுகள் கட்ட ரூ.825 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் குடிசைப்பகுதிகளற்ற நகரங்களை உருவாக்கும் திட்டத் தில், இந்தாண்டு 10 ஆயிரம் வீடு கள் கட்ட ரூ.825 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கப் பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந் ததும், 2012-ம் ஆண்டு மார்ச் மாதம், தொலைநோக்குத் திட்டம்- 2023ஐ முதல்வர் ஜெயலலிதா வெளியிட் டார். தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வீட்டு வசதியை அளிப்பதும், நகர்ப்புறங்களுக்கு உலகத்தரத்திலான உட்கட்டமைப்பு வசதியை உருவாக்குவதும் இத் திட்டத்தின் நோக்கம்.

இதன்படி, 2023க்குள் ரூ.75 ஆயி ரம் கோடி மதிப்பில், பொருளா தாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு 25 லட்சம் குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தொலை நோக்குத்திட்டத்தின் கீழ், குடிசைப் பகுதிகள் அற்ற நகரங்களை உரு வாக்கும் வகையில், ரூ.65 ஆயிரம் கோடி செலவில் தமிழகத்தில் உள்ள அனைத்து நகர குடிசைப்பகுதி குடும்பங்களுக்கும் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரூ.25 ஆயிரம் கோடியி லும், உலகத்தரம் வாய்ந்த மற்ற நகரங்களில் ரூ.25 ஆயிரம் கோடி யிலும், தஞ்சை, திண்டுக்கல் உள்ளிட்ட இதர நகரப்பகுதிகளில் ரூ.15ஆயிரம் கோடியிலும் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள் ளது.

திட்டத்தின் ஒரு பகுதியாக குடி சைப்பகுதி மாற்று வாரி யத்தால் 2015-16ம் ஆண்டில் 10 ஆயிரம் குடியிருப்புகளைக் ரூ.825 கோடி செலவில் கட்ட ஆயத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு சமீபத்தில் அனை வருக்கும் வீட்டு வசதி திட்டம்- 2022க்கான வழிகாட்டு நெறிமுறை களை அறிவித்தது. இதன்படி, குடிசைப்பகுதிகளில் கள மறு மேம்பாடு, மானியத்துடன் கூடிய கடன் மூலம் பயனாளிகளின் திறனுக்கேற்ற வீடுகள், பங்களிப்பு முறையில் திறனுக்கு ஏற்ற வீடுகள், பயனாளிகளால் கட்டப்படும் தனி வீடுகளுக்கு மானியம் வழங்கு தல் போன்ற திட்டங்கள் செயல் படுத்தப்பட உள்ளன.

இதன் கீழ், தமிழகத்துக்கு இந்த நிதியாண்டுக்கு ரூ.314.55 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தில், போதுமான அடிப்படை வசதிகளு டன் 30 சமீ வரை தளப்பரப்பு கொண்ட வீடுகள் கட்டும் திட்டத் துக்கு நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தின் நகரப் பகுதிகளில் கடந்த மே மாதம் 23-ம் தேதி நிலவரப்படி குடிசைப்பகுதிகளில் வாழும் அனைத்து குடும்பங் களும் இத் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவை என்றும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x