

கோயில் நிலங்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த தீர்ப்பின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிலங்களை மீட்க இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அறிவுறுத்தினார்.
இதையடுத்து, தென்காசி உலகம்மன் கோயிலுக்குச் சொந்தமான தென்காசியில் உள்ள 54 சென்ட் நிலம், குத்துக்கல்வலசை பகுதியில் உள்ள 67 சென்ட் நிலம், தென்காசி குலசேகரநாத சுவாமி கோயில் உச்சந்திக் கட்டளைக்குச் சொந்தமான குணராமநல்லூரில் உள்ள 45 சென்ட் நிலம், அதே பகுதியில் உள்ள 26 சென்ட் நிலம், இலஞ்சி பகுதியில் 49 சென்ட் நிலம், தென்காசி உலகம்மன் கோயிலுக்குச் சொந்தமான செங்கோட்டை வட்டம், பெரியபிள்ளைவலசை கிராமத்தில் உள்ள 1.74 ஏக்கர் நிலம் என மொத்தம் 4 ஏக்கர் 15 சென்ட் நிலங்கள் மீட்கப்பட்டன.
நிலத்தை மீட்கும் பணியில் அறந்லையத் துறை இணை ஆணையர் பரஞ்சோதி உத்தரவின்படி உதவி ஆணையர் அருணாசலம், தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் மற்றும் வருவாய்த் துறையினர், அறநிலையத் துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட நிலங்களில் அறநிலையத் துறை சார்பில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டன.