இந்தி ஆலோசனைக் குழு உறுப்பினராக ஐசரி கணேஷ் தேர்வு

இந்தி ஆலோசனைக் குழு உறுப்பினராக ஐசரி கணேஷ் தேர்வு
Updated on
1 min read

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சகத்தின் சார்பில் ‘இந்திஆலோசனைக் குழு’ அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் ஸ்மிருதிஇரானி இக்குழுவின் தலைவராக உள்ளார். இக்குழுவில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், மத்திய அமைச்சக செயலாளர்கள், இணை செயலர்கள் உள்ளிட்ட 30 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர், வேந்தர் மற்றும் தலைவர் ஐசரி கே.கணேஷ் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பல ஆண்டுகளுக்கு பின் இந்தி ஆலோசனை குழுவில் தமிழகத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in