பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு: முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? - அரசுக்கு துரைமுருகன் கேள்வி

பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு: முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? - அரசுக்கு துரைமுருகன் கேள்வி
Updated on
1 min read

உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா என திமுக சட்டப்பேரவை குழு துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் அ.சவுந் தரராஜன் (மார்க்சிஸ்ட்), ஒரு பிரச் சினை குறித்து பேச முயன்றார். பேரவைத் தலைவர் அனுமதி மறுத் ததால் அதைக் கண்டித்து மார்க் சிஸ்ட் உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய தற்காக முதல்வர் ஜெயலலிதா வுக்கு பாராட்டு தெரிவிக்கும் தனி நபர் தீர்மானத்தை அவை முன்னவரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்தார். அவர் பேச எழுந்ததும் திமுக சட்டப்பேரவைக் குழு துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து, ஒரு பிரச்சினை குறித்து தனக்கு பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என கோரினார். நிதி அமைச்சர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்ததும் பேச வாய்ப்பு அளிப்பதாக பேரவைத் தலைவர் பி.தனபால் கூறினார். அதை ஏற் காமல் துரைமுருகன் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ், பாமக, புதிய தமிழகம் கட்சிகளின் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் பேரவை வளாகத்தில் நிருபர்களிடம் துரைமுருகன் கூறிய தாவது:

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியதற்காக முதல் வரைப் பாராட்டி நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனித் தீர் மானம் கொண்டு வந்தார். உலக முதலீ்ட்டாளர்கள் மாநாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடக்கோரி ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளோம். அதை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாமல் பாராட்டு தீர்மானம் கொண்டு வந்ததால் அதை எதிர்த்தோம். எந்தெந்த துறைகளில், எந்தெந்த நிறுவனங்கள், எவ்வளவு முதலீடு செய்துள்ளன என கூறாமல் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடுகள் வந்துள்ளதாக விளம்பரம் செய்கின்றனர். உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக பேரவையில் வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? என சவால் விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.சவுந்தரராஜன் கூறும்போது, ‘‘கடந்த 2-ம் தேதி சிதம்பரம் ரயில் நிலையத்தில் நடந்த போராட்டத்தின்போது மார்க்சிஸ்ட் எம்எல்ஏ கே.பாலகிருஷ்ணன் காவல் துறையினரால் தாக்கப் பட்டார். ஆனால், காவல் துறை மானியக் கோரிக்கையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, பாலகிருஷ்ணனை காவல்துறை யினர் தாக்கவில்லை என்றார். இதற்கு விளக்கம் அளிக்க பாலகிருஷ்ணனுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. இதுகுறித்து இன்று (நேற்று) கேள்வி நேரம் முடிந்ததும் பேச வாய்ப்பு கேட்டும் கிடைக்கவில்லை. அதைக் கண்டித்து வெளிநடப்பு செய் தோம்’’ என்றார்.

‘‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இது குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தோம்’’ என எஸ்.விஜயதாரணி (காங்கிரஸ்), ஏ.கணேஷ்குமார் (பாமக), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) ஆகியோர் நிருபர்களிடம் தெரி வித்தனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in