தமிழக அரசால் சீல் வைக்கப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று முக்கிய தீர்ப்பு

தமிழக அரசால் சீல் வைக்கப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று முக்கிய தீர்ப்பு
Updated on
1 min read

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கஉள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் புகையால் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு பலதரப்பட்ட நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். கடந்த 2018 மே 22-ல் இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்தனர்.

இதையடுத்து 2018 மே 28 அன்று அந்த ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதைஎதிர்த்தும் ஆலையை திறக்கக்கோரியும் வேதாந்தா நிறுவனம்சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று காலை தீர்ப்பு அளிக்க உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in