

தமிழக மக்களின் வளர்ச்சி, வளம் ஆகிய ஒற்றைக் குறிக்கோளுடன் செயல்பட்டு வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி, அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், உயர்கல்வி மற்றும் முதலீட்டாளர்களுக்கான வரவேற்பு குறித்து அவர் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:
“இந்தியாவில் ஏறக்குறைய 5-ல்ஒரு பங்கு சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் பொறியியல் கல்லூரிகளையும், 3-ல் ஒருபங்கு சிறந்த கலை அறிவியல் கல்லூரிகளையும் கொண்டு, உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக இந்த ஆட்சியில் தமிழகம் திகழ்வதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என்று ஒரு ட்விட்டர் பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.
மேலும் ‘இன்வெஸ்ட் இந்தியா’ இணையதளத்தில் தமிழகம் குறித்த தகவல்களை குறிப்பிட்டு, வெளியிட்ட பதிவில்,‘‘ தமிழக அரசுதற்போதைய சூழலிலும் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. தமிழக மக்களின்வளம் மற்றும் வளர்ச்சி ஆகிய ஒன்றை மட்டுமே மனதில் கொண்டுள்ள தமிழக அரசு, முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க உதவுவதற்காக இன்னும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும்’’ என்று தெரிவித்துள்ளார்.