திருத்தப் பணிகள் நவ. 16-ம் தேதி தொடக்கம்; ஜன.15-ல் இறுதி வாக்காளர் பட்டியல்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சத்யபிரத சாஹூ
சத்யபிரத சாஹூ
Updated on
2 min read

தமிழகத்தில் வரும் ஜனவரி 15-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தேர்தல் ஆணைய அறிவிப் பின்படி, 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற் கொள்ளப்படுகிறது. நவம்பர் 16-ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அன்றுமுதல், டிசம்பர் 12-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல் , பெயர் நீக்கம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். பெறப்பட்ட மனுக்கள் மீது ஜனவரி 1-ம் தேதி தீர்வு காணப்படும். ஜனவரி 14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலுக்கான அனுமதியை ஆணையத்திடம் இருந்து பெற்று, 15-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

எனவே, நவம்பர் 16 முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் போன்ற பணிகளை 6, 7, 8 மற்றும் 8-ஏ ஆகிய படிவங்கள் மூலம் மேற்கொள்ளலாம்.

வாக்குச்சாவடி அலுவலர் அல்லது வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் அலுவலக நாட்களில் விண்ணப்பம் அளிக்கலாம். அலுவலக நாட்களில் விண்ணப்பிக்க முடியாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். பெயர் சேர்ப்பதற்கான படிவத்துடன் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை, சமீபத்திய குடிநீர், தொலைபேசி, எரிவாயு சிலிண் டர் ரசீது, வங்கி, கிசான் கார்டு, அஞ்சலக சமீபத்திய கணக்கு புத்தகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று முகவரிக்காக சமர்ப்பிக்க லாம். வயதை நிரூபிக்க 25 வய துக்கு உட்பட்டவர்களாக இருந் தால் கட்டாயம் பிறப்பு சான் றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், www.nvsp.in என்ற இணையதளத்தில் வாக்காளர் உதவி எண் மற்றும் கைபேசி செயலி மூலம் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம்.

18 வயது நிறைவடைந்தும் பெயர் சேர்க்காதவர்கள் பெயர்களை சேர்க்கலாம். ஒருவேளை பட்டியலில் பெயர் இடம் பெற் றிருந்து, வாக்காளர் அடையாள அட்டையை தொலைத்தவர்கள் தாலுகா அல்லது மண்டல அலு வலகங்களில் எப்போது வேண்டு மானாலும் விண்ணப்பித்து பெற லாம்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

6.13 கோடி வாக்காளர்கள்

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 3 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 172 ஆண்கள், 3 கோடியே 10 லட்சத்து 45 ஆயிரத்து 969 பெண்கள் மற்றும் 6,497 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6 கோடியே 13 லட்சத்து 6 ஆயிரத்து 638 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களைவிட 7 லட் சத்து 91 ஆயிரத்து 797 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள் ளனர்.

நெருங்கும் பேரவை பொதுத்தேர்தல்

தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இளம் வாக்காளர்கள் அதிக அளவில் சேரும் பட்சத்தில், அது கட்சிகளின் வாக்கு வங்கி சதவீதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது. எனவே, வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க அரசியல் கட்சிகளும் முக்கியத்துவம் கொடுத்து செயல்படும் என தெரிகிறது. கரோனா வைரஸ் பரவலால் தேர்தல் தள்ளிப்போகலாம் என பல தரப்பினரும் கூறி வருகின்றனர். ஆனால், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தொடங்க உள்ளதால், தேர்தலை உரிய காலத்தில் நடத்த ஆணையம் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in