ஒண்டிவீரன் நினைவுநாள் நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி இல்லை: தென்காசி ஆட்சியர் அறிவிப்பு

ஒண்டிவீரன் நினைவுநாள் நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி இல்லை: தென்காசி ஆட்சியர் அறிவிப்பு
Updated on
1 min read

ஒண்டிவீரன் நினைவுநாள் நிகழ்ச்சியில்பொதுமக்கள் பங்கேற்க அனுமதி இல்லை என தென்காசி ஆட்சியர் அறிவித்தார்.

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுநாளான ஆகஸ்ட் 20-ம் தேதி தென்காசி மாவட்டம், நெல்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஒவ்வோர் ஆண்டும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

அன்றைய தினம் பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோரும் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர்.

இந்த ஆண்டு கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்கள் அதிகம் கூடாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஒண்டிவீரன் நினைவு நாளையொட்டி நெல்கட்டும்செவல் கிராமத்தில் பச்சேரியில் உள்ள நினைவிடத்துக்கு தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வந்து கலந்துகொள்ள அனுமதி இல்லை. இதற்கு பொதுமக்கள் மற்றும் அனைத்து சமுதாய அமைப்புகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

ஒண்டிவீரன் நினைவுநாளை முன்னிட்டு நெல்கட்டும்செவல் கிராமத்தில் பச்சேரியில் அமைந்துள்ள நினைவிடத்தில் அமைச்சர், எம்பி, எம்எல்ஏக்கள் மாவட்ட ஆட்சியருடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் என்று தென்காசி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in