‘பாடும் நிலா பாலு’ உடல் நலன் பெற்று பாட்டுப் பயணத்தைத் தொடரட்டும்: ஸ்டாலின் வாழ்த்து

‘பாடும் நிலா பாலு’ உடல் நலன் பெற்று பாட்டுப் பயணத்தைத் தொடரட்டும்: ஸ்டாலின் வாழ்த்து
Updated on
1 min read

இதயம் கவரும் இனியக்குரலால் மக்கள் மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளித்த பாடும் நிலா பாலு உடல் நலன் தேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென அவரது உடல் நிலை மோசமானது. அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சையும் தொடர்ந்து எக்மோ கருவி சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

பின்னர் அவரது உடல் நலம் தேறியது. எஸ்.பி.பியின் பண்பான குணமும், சாதனையும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை அவருக்கு அளித்துள்ளது. உலகம் முழுவதும் அவர் நலம்பெற பிரார்த்தனை செய்யப்பட்டது. தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் நலம் பெற வாழ்த்தினர்.

எஸ்.பிபியின் பால்ய நண்பர் இளையராஜா, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் காணொலி வெளியிட்டு நலம் பெற வாழ்த்தினர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் எஸ்.பி.பி நலம் பெற வாழ்த்தி தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அவரது முகநூல் பதிவு:

“கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் தேறி வருகிறார் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.

இதயம் கவரும் இனிய குரலால் மக்களின் மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளித்த திரு. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் விரைந்து முழு உடல்நலன் பெற்று மீண்டும் தன் பாட்டுப் பயணத்தைத் தொடரட்டும்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in