

விழுப்புரம் ஆயுதப்படை குடியிருப்பில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு நேற்று தற்கொலை செய்தார்.
விழுப்புரம் அடுத்த கண்டாச்சி புரத்தைச் சேர்ந்த குமார் மகன்ஏழுமலை (25). இவர் கடந்த 2017-ம்ஆண்டு காவல் துறையில் பணியில்சேர்ந்தார். இவருக்கு திருமண மாகவில்லை. கடந்தாண்டு முதல்விழுப்புரம் ஆயுதப்படை பிரிவில்இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்தார். இதனால் விழுப்பு ரம் காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் குடியி ருப்பில் வசித்து வந்தார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் இவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. 55 நாட்கள் ஓய்விற்கு பிறகு கடந்த வாரம் மீண்டும் பணியில் இணைந்தார். நேற்று முன்தினம் கண்டாச்சிபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். அன்று மாலையே காவலர் குடியி ருப்புக்கு திரும்பி வந்தார். அவர் தனது குடியிருப்பில் இருந்து நேற்று காலை நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. சக காவலர்கள் அறை அருகே சென்றுஅவரை அழைத்தனர். குளித்து விட்டு வருவதாகக் கூறியுள்ளார். சிறிதுநேரத்தில் குடியிருப்பில் தான் வைத்திருந்த இரட்டைக் குழல்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு ஏழுமலை தற்கொலை செய்தார். தகவலறிந்த விழுப்புரம்மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயரதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். ஏழுமலை தற்கொலைக்கு குடும்பச் சூழல் காரணமாக என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல்போன் தொடர்புகள் குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் இவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. 55 நாட்கள் ஓய்விற்கு பிறகு கடந்த வாரம் மீண்டும் பணியில் இணைந்தார்.