

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள மூளிக்குளத்தைச் சேர்ந்தவர் டிப்ளமோ பொறியாளர் மணிராஜ் மாரியப்பன் (35). இவர் உட்பட மேற்குவங்கம், உத்தரபிரதேசம், மஹாராஷ்டிரா, கேரள மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் 21 பேர், ஓமன் நாட்டில் அகமது சுல்தான் என்பவரது கப்பலில் வேலை செய்வதற்காக, கடந்த பிப்ரவரி 1-ம் தேதி புறப்பட்டுச் சென்றனர்.
பிப்ரவரி 4-ம் தேதி ஓமனில் இருந்து சவுதி அரேபியாவுக்கு கப்பலில் சென்று கொண்டிருந்தபோது ஓமன் நாட்டு கடற்படையினர் இவர்களை சிறைபிடித்தனர். சலா என்ற தீவில் ஓர் அறைக்குள் தங்களை அடைத்து வைத்துள்ளனர் என்றும், கடந்த 7 மாதமாக அடைபட்டுள்ள தங்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாட்ஸ்அப் மூலம் அவர்கள் வீடியோ பதிவிட்டுள்ளனர்.