

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பிரதோஷ வழிபாடு ஆன்லைனில் ஒளிபரப்பப்பட்டது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.
இக்கோயிலில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடத்தப்படும். நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேரில் வந்து தரிசனம் செய்வது வழக்கம். கரோனா வைரஸ் பரவல் காரணமாக கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, கடந்த 4 மாதங்களாக பிரதோஷ வழிபாடு யூ-டியூபில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நேற்று மாலை 4.30 மணிக்கு நந்தி அபிஷேகமும் அதைத் தொடர்ந்து பிரதோஷ நாயகர் அபிஷேகமும் நடைபெற்றது. இந்த வழிபாடு யூ-டியூபில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பிரதோஷ வழிபாட்டைக் கண்டு மகிழ்ந்தனர்.
இதேபோல், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டையும் யூ-டியூப் மூலம் பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.