

தமிழகத்தில் இன்று புதிதாக 5,950 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து இன்றைய (ஆக.16) நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:
தமிழகத்தில் இன்று புதிதாக 5,950 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 3,585 பேர். பெண்கள் 2,365 பேர்.
தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஆண்கள் 2 லட்சத்து 3,838 பேர். பெண்கள் 1 லட்சத்து 34 ஆயிரத்து 188 பேர். மாற்றுப்பாலினத்தவர்கள் 29 பேர்.
இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 16 ஆயிரத்து 385 பேர். 13-60 வயதுடையவர்கள் 2 லட்சத்து 78 ஆயிரத்து 903 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 42 ஆயிரத்து 767 பேர்.
தமிழகத்தில் இன்று பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 450. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 37 லட்சத்து 11 ஆயிரத்து 246.
தமிழகத்தில் இன்று மட்டும் 68 ஆயிரத்து 444 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 35 லட்சத்து 81 ஆயிரத்து 939 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று தனியார் மருத்துவமனைகளில் 39 பேரும், அரசு மருத்துவமனைகளில் 86 பேரும் என 125 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 5,766 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 17 பேர். ஏற்கெனவே இணை நோய்கள் உள்ளவர்கள் 108 பேர்.
இன்று மட்டும் 6,019 பேர் மருத்துவமனைகளிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக, 2 லட்சத்து 78 ஆயிரத்து 270 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 54 ஆயிரத்து 19 பேர் (தனிமைப்படுத்துதல் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.
இன்று கரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1,196 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்து 650 ஆக உயர்ந்துள்ளது. இன்று 1,009 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 2,698 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்று 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 2,454 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 11 ஆயிரத்து 498 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் அரசு சார்பாக 62 மற்றும் தனியார் சார்பாக 73 என மொத்தம் 135 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.