மன்னார்குடி அருகே லாரி மீது வேன் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே லாரி மீது மோதியதில் சேதமடைந்த வேன்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே லாரி மீது மோதியதில் சேதமடைந்த வேன்.
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

திருச்சியிலிருந்து பிராய்லர் கோழிகளை ஏற்றிக்கொண்டு ஒருவேன் நேற்று முன்தினம் இரவுதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு வந்துகொண்டிருந்தது. மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை என்ற இடத்தில் நேற்றுஅதிகாலை வந்தபோது, சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த லாரியின் மீது வேன் மோதியது.

இந்த விபத்தில் பிராய்லர் கோழிகளை ஏற்றி வந்த வேனில்இருந்த தாராபுரம் சந்திரசேகர்(40), ஆலங்குடி சி.வெங்கடாச்சலம்(45), அறந்தாங்கி ப.வெங்கடாச்சலம்(46), மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஷிபு மஜி(35) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுநரான திருப்பூர் மாவட்டம் நத்தபாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் காயங்களுடன் உயிர் தப்பினார்.

மன்னார்குடி போலீஸார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in