பாம்பு பண்ணை மூடப்பட்டதால் வாழ்வாதாரம் இழந்த இருளர்கள்: நிவாரணம் வழங்க கோரிக்கை

மாமல்லபுரம் அருகே வடநெம்மேலி பாம்பு பண்ணையில் விஷம் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர். (கோப்பு படம்)
மாமல்லபுரம் அருகே வடநெம்மேலி பாம்பு பண்ணையில் விஷம் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர். (கோப்பு படம்)
Updated on
1 min read

கரோனா காரணமாக வடநெம்மேலி பாம்பு பண்ணை மூடப்பட்டதால், பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பழங்குடி இருளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அருகே வடநெம்மேலி கிராமத்தில், தமிழக அரசின் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவுச் சங்கம் இயங்குகிறது. இச்சங்கத்தில் 360 பழங்குடி இருளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இவர்கள் பிடித்துக்கொண்டு வரும் பாம்பின் வகைக்கு ஏற்பரூ.350 முதல் ரூ.2,600 வரை தொகை வழங்கப்பட்டது. கரோனாகாரணமாக கடந்த 5 மாதங்களாக பாம்பு பண்ணை மூடப்பட்டதால், பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்ட இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, “கடந்த 5 மாதங்களாக பாம்பு பண்ணை மூடப்பட்டதால் பூஞ்சேரி, குன்னப்பட்டு, பட்டிப்புலம், மானாம்பதி உள்ளிட்ட பகுதி இருளர் குடியிருப்பில் வாழ்ந்து வரும் 360 பழங்குடி இருளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு நிவாரணஉதவிகள் வழங்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in