ஓசூர் வனக்கோட்டத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டம்: 2 வனச்சரகர்கள் உட்பட 18 பேருக்கு விருது 

ஓசூர் வனக்கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற 74-வது சுதந்திரதின விிழாவில் விருது பெற்றவர்களுடன் மாவட்ட வன உயிரினக் காப்பாளர் செ. பிரபு மற்றும் பலர்.
ஓசூர் வனக்கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற 74-வது சுதந்திரதின விிழாவில் விருது பெற்றவர்களுடன் மாவட்ட வன உயிரினக் காப்பாளர் செ. பிரபு மற்றும் பலர்.
Updated on
1 min read

ஓசூர் வனக்கோட்டத்தில் நடைபெற்ற 74-வது சுதந்திர தின விழாவில் வனப்பாதுகாப்பு மற்றும் மனித - விலங்கு மோதல் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய 2 வனச்சரகர்கள் உட்பட 18 பேருக்கு விருது வழங்கப்பட்டது.

ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ஓசூர் வனக்கோட்ட அலுவலகத்தில் 74-வது சுதந்திர தினவிழா நடைபெற்றது. இந்த விழாவில் ஓசூர் வனக்கோட்ட வனஉயிரினக் காப்பாளர் செ.பிரபு தலைமை தாங்கினார். உதவி வனப் பாதுகாவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர் தேசிய கொடி ஏற்றிவைத்தார்.

பின்பு நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் வனப்பாதுகாப்பு மற்றும் மனித- விலங்கு மோதல் தடுப்புப் பிரிவில் சிறப்பாகப் பணியாற்றிய ஓசூர் வனச்சரக அலுவலர் ரவி, உரிகம் வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் மற்றும் வனஉயிரினப் பாதுகாப்புப் பிரிவில் சிறப்பாகப் பணியாற்றிய கால்நடை மருத்துவர் பிரகாஷ் ஆகியோருக்கு அவர்களின் சேவையைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டது.

அதேபோல ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள ஓசூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி, அஞ்செட்டி, ஜவளகிரி, உரிகம், ராயக்கோட்டை உள்ளிட்ட 7 வனச்சரகங்களிலும் வனப்பாதுகாப்பு மற்றும் மனித – விலங்கு மோதல் தடுப்புப் பணியில் சிறப்பாகப் பணியாற்றிய வனவர், வனக்காப்பாளர். வனக்காவலர் உள்ளிட்ட 15 பேருக்கும் அவர்களின் சேவையைப் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை மாவட்ட வனஉயிரினக் காப்பாளர் செ.பிரபு வழங்கினார்.

இந்த நிகழ்வில் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார், ஜவளகிரி வனச்சரகர் நாகராஜன், வனவிலங்கு தன்னார்வலர் சஞ்சீவ் மற்றும் அனைத்து வனச்சரகத்தைச் சேர்ந்த வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in