Published : 15 Aug 2020 03:00 PM
Last Updated : 15 Aug 2020 03:00 PM

முதன் முறையாக கரோனா தடுப்பு வீரர்களுக்கு சிறப்பு விருது: சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்கினார்

சுதந்திர தின விழாவில் இந்த ஆண்டு மற்ற விருதுகளுக்கு இணையாக கரோனா தடுப்பு வீரர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மருத்துவ நிபுணர்குழுவுக்கு ஆலோசனை வழங்கிய ஆராய்ச்சியாளர் சௌமியா சாமிநாதனுக்கு விருது வழங்கப்பட்டது.

கரோனா முன்களப்பணியாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதுகுறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பு:

முதலவர் ஆணைப்படி பல்வேறு அரசுத் துறைகள் கரோனா தடுப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கொரோனா தடுப்புப் பணிகளில் பெரும் பங்காற்றி வருவதுடன் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதிலும் சிறந்த பங்காற்றி வருகின்றன.

இந்த 6 துறைகளில் கரோனா தடுப்பு முன்களப் பணியாளர்களாக பணிபுரியும் 27 பணியாளர்களை கௌரவப்படுத்தும் வகையில் தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் நன்மதிப்பு சான்றிதழ், முதல்வரால் வழங்கப்பட்டது.

பாராட்டுச் சான்றிதழ் – 1

(i) தமிழ்நாடு மருத்துவச் சேவைகள் கழகத்திற்கு கரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மருந்துகள் எவ்வித தங்கு தடைகளுமின்றி கிடைக்கச் செய்வதற்கான வழிமுறைகள் மேற்கொண்டதற்காக.

பாராட்டுச் சான்றிதழ் – 2

i) தமிழ்நாடு மருத்துவச் சேவைகள் கழகத்திற்கு கொரோனாவை கட்டுப்பத்துவதற்கு மருந்துகள் எவ்வித தங்கு தடைகளுமின்றி கிடைக்கச் செய்வதற்கான வழிமுறைகள் மேற்கொண்டதற்காக
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (i) எதிர்பார்ப்பு மேலாண்மை, (ii) தேவை அடிப்படையிலான தொடர்ச்சியான விநியோக மாதிரி, (iii) பொருத்தமான தொழில்நுட்பம் மற்றும் விற்பனையாளர் தேர்வு, (iஎ) ஆதாரம் சார்ந்த கொள்முதல் திட்டமிடல் மற்றும் (எ) விற்பனையாளர்களை ஈடுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துததல் போன்ற திட்டங்களின் மூலம் மருந்துகள், நுகர்பொருட்கள் மற்றம் சேவைகள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்ததுடன் சுகாதார உள்கட்டமைப்புகளை அதிகரிக்கச் செய்துள்ளது.

(எ) தமிழக காவல் துறையின் இணையவழிக் குற்றங்கள் தடுப்புப் பிரிவிற்கு கரோனா தொற்று உறுதியான நபர்கள் குறித்து கிடைக்கப் பெற்ற விவரங்களை பகுப்பாய்வு செய்து அதனடிப்படையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களைக் கண்டறிய கணினி மாதிரி ஒன்றை உருவாக்கியமைக்காக
தமிழ்நாடு காவல்துறை கரோனா நோயாளிகளின் அனைத்து சாத்தியமான தொடர்புகளை கண்டறிய பல அம்ச முயற்சிகளை மேற்கொண்டு ஒரு கணினி மாதிரியை உருவாக்கியது.

இதில் பல்வேறு மூலங்களிலிருந்து தரவுகள் உள்ளடக்கிய விவரங்களை நாள்தோறும் கணினியில் உள்ளீடு செய்து அதனை கரோனா நோயாளிகளின் விவரங்களுடன் பகுப்பாய்வு செய்தது.

இந்தத் தொழில்நுட்பப் பயன்பாடு தொடர்புகளை தடமறிவதிலும், கொள்கை ரீதிதிhன முடிவுகளை எடுப்பதிலும், கரோனா நோய்ப் பரவலைத் தடுப்பது (ம) கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதிலும் கணிசமான பங்களித்துள்ளது”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x