நீலகிரியில் எளிமையாக நடைபெற்ற சுதந்திர தின விழா: மாவட்ட ஆட்சியர் கொடியேற்றினார்

நீலகிரியில் எளிமையாக நடைபெற்ற சுதந்திர தின விழா: மாவட்ட ஆட்சியர் கொடியேற்றினார்
Updated on
1 min read

நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தின விழா எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது. உதகையில் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வி.சசி மோகன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக சுகாதாரத் துறை, மருத்துவத் துறை, காவல்துறை, வருவாய்த் துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறை உட்பட 29 துறைகளைச் சேர்ந்தோருக்கும் கிராமப்புற மக்கள் மேம்பாட்டிற்குச் செயல்பட்டதாக நீலகிரி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி, கனரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் மனோஜ் ஆகியோருடன் அஞ்சல் துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அஞ்சல் சேவகர் சிவன் ஆகியோருக்கும் பாராட்டுக் கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் கலைக்குழு சார்பில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் பழனியம்மாள் கொடி ஏற்றினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in