

நாட்டின் 74 வது சுதந்திர தினத்தை ஒட்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் கொடியேற்றினார். பின்னர் நடந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நாட்டின் 74 வது சுதந்திர தினம் நாடெங்கும் அனுஸ்டிக்கப்படுகிறது. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எட்ப்பாடி பழனிசாமி கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். நாடெங்கும் சிறந்த சாதனை புரிந்தவர்களுக்கு முதல்வர் விருது வழங்கினார்.
தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், தேர்தல் ஆணையம், ரிப்பன் மாளிகை உள்ளிட்ட இடங்களிலும் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு நடக்கிறது. ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடியை ஏற்றினார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தலில் இருந்த ஆளுநர் புரோஹித் நேற்று முழு உடல் நலம் தேறியதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் உடல் நலம் தேறிய நிலையில் முதல் நிகழ்ச்சியாக தேசியக்கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.
தேசியக்கொடியை ஏற்றியப்பின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.