Published : 15 Aug 2020 07:58 AM
Last Updated : 15 Aug 2020 07:58 AM

ஜாதி, மத வேற்றுமையை கடந்து ஒரே நோக்குடன் செயல்பட வேண்டும்: சத்குரு சுதந்திர தின வாழ்த்து

பாரத தேசத்தின் முன்னேற்றத்துக்காக, ஜாதி, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து, அனைவரும் ஒரே நோக்குடன் செயல்பட வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்து செய்தியில், "தேசத்தின் சுதந்திரத்துக்காக ஏராளமானோர் தங்களது உயிரை அர்ப்பணித்துள்ளனர். ஜாதி, மதம்,மொழி, கட்சி மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் நாட்டில் பிரிவினைகளை உருவாக்க வேண்டாம். நமது மொழி, உணவு என அனைத்திலும் வித்தியாசங்கள் இருக்கின்றன. நாட்டில் பல மதங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் நமது கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் சொத்தாகப் பார்க்க வேண்டும். பிரிவினையை உருவாக்கும் விஷயமாக கருதக்கூடாது. நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைவரும் ஒரே நோக்குடன் செயல்பட வேண்டும்.

கரோனா வைரஸ் பாதிப்பு நிறைவு பெற்ற பிறகு, நம் நாடுபொருளாதார ரீதியாக முன்னேற்றமடைய மகத்தான வாய்ப்புகள் உள்ளன. வேறுபாடுகளைக் கடந்துசெயல்பட்டால், அடுத்த 10, 20 ஆண்டுகளில் சுமார் 50 கோடி மக்களின் வாழ்க்கைச் சூழலை உயர்த்த முடியும். மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x