Published : 15 Aug 2020 07:51 AM
Last Updated : 15 Aug 2020 07:51 AM

அனைத்து வகை வாகனங்களிலும் 'ஏஐஎஸ்:090' தர ஒளிர்பட்டை ஒட்டுவது கட்டாயம்: போக்குவரத்து துறை உத்தரவு

சென்னை

அனைத்து வகை வாகனங்களிலும் ஏஐஎஸ்:090 தர ஒளிர்பட்டை ஒட்ட வேண்டுமென போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. போலி யான ஸ்டிக்கர் ஓட்டினால் எப்.சி. வழங்கப்படாது என்றும் எச்சரித் துள்ளது.

இரவு நேரத்தில் வாகனங்கள் செல்லும்போது, சில வாகனங் களில் தரமான ஒளிர்பட்டைகள் ஓட்டாததால் அவை சரியாக ஒளிர் வதில்லை. இதனால் பழுது அல்லது ஓய்வுக்காக வாகனங்களை நிறுத்தி வைக்கும்போது அவை நிற்பது தெரியாமல் விபத்துகள் நேர்கின்றன.

இதையடுத்து அனைத்து வகை வாகனங்களிலும் கட்டாயம் ஏஐஎஸ்:090 தரமான ஒளிர்பட்டை ஒட்டுவதை கட்டாயமாக்க வேண்டு மென போக்குவரத்து ஆணையர் தென்காசி எஸ்.ஜவஹர் அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரி களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இரவு நேரங்களில் வாகனங்கள் செல்வதை தெளி வாகக் காட்டும் வகையில் வாகனங்களின் முன்பகுதியில் வெள்ளை நிறத்திலும், பின்பகுதியில் சிவப்பு நிறத்திலும், நடுப்பகுதியில் மஞ்சள் நிறத்திலும் வாகனங்களின் தன்மைக்கு ஏற்றவாறு தரமான ஒளிர்பட்டை இருக்க வேண்டும். சிலர் போலியான தரமில்லாத ஒளிர்பட்டைகளை ஒட்டுவதால், இரவு நேரங்களில் வாகனங்களை தெளிவாகவே பார்க்க முடிவதில்லை. இதனால், சில இடங்களில் விபத்துகள் நடந்து, உயிரிழப்பு நடந்துள்ளது. எனவே, தரமான ஒளிர்பட்டைகளை ஒட்ட போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தரமில்லாத ஒளிர்பட்டை இருந்தால், அந்தந்த வாகனங் களுக்கு எப்.சி. (தகுதி சான்று) வழங்கப்படாது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x