Published : 15 Aug 2020 07:43 AM
Last Updated : 15 Aug 2020 07:43 AM

3 நிமிடம் 25 விநாடிகளில் 230 திருக்குறளை ஒப்புவித்து சாதனை

230 குறளை 3 நிமிடம் 25 விநாடிகளில் அதிவேகமாக ஒப்புவித்து உலக சாதனை புரிந்த கன்னியாகுமரி மாவட்ட பள்ளி மாணவி யூதிஷா.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவி யூதிஷா 3 நிமிடம் 25 விநாடிகளில், 230 குறளை மனப்பாடமாக ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் சொத்தவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருபவர் மாணவி யூதிஷா(13). திருக்குறளை மனப்பாடமாக அதிவேகமாக சொல்லும் திறமை பெற்ற இவர், 5 நிமிடத்தில், 230 குறளை ஒப்புவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

போட்டிக்கான ஏற்பாடு நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்யப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் முன்னிலையில் உலக சாதனைக்காக அதிவேகமாக திருக்குறளை ஒப்புவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாணவி யூதிஷா நிர்ணயிக்கப்பட்ட 5 நிமிடங்களுக்கு முன்பாகவே, அதாவது, 3 நிமிடம் 25 விநாடிகளில், 230 குறளையும் மனப்பாடமாக ஒப்புவித்து உலக சாதனை படைத்தார். ட்ரம்ப் உலக சாதனை ஆய்வு மையத்தின் தென்மண்டல நடுவர் சம்பத்குமார் இந்நிகழ்வை பதிவு செய்தார்.ஆட்சியர் உள்ளிட்ட பலரும் மாணவியைப் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x