Published : 15 Aug 2020 06:58 AM
Last Updated : 15 Aug 2020 06:58 AM

2 ஆண்டுகளில் அடையாறு, கூவம் ஆறுகள் பொதுமக்கள் விரும்பும் பசுமை படர்ந்த பகுதிகளாக மாறும்: சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை திட்ட அதிகாரி உறுதி

அடுத்த 2 ஆண்டுகளில் அடையாறு, கூவம் ஆறுகள் மக்கள் விரும்பும் பசுமை படர்ந்த பகுதிகளாக மாறும் என்று சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை திட்ட அதிகாரி வி.கலையரசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மாசடைந்துள்ள அடையாறு, கூவம் ஆறுகளை சீரமைக்க, சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளையை தமிழக அரசு நிறுவியது. அதன் சார்பில் அடையாறு, கூவம் ஆறுகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அதன்ஒரு பகுதியாக, இனி வரும் காலங்களில் ஆற்றை மாசுபடுத்தாமல்பாதுகாப்பது குறித்து, ஆற்றின்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள், கல்வி நிறுவனங்களுக்கு தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக கூவம் ஆற்றின் கரையோரம் இயங்கி வரும் சென்னை சமூகப் பணிகள் கல்லூரி நாட்டுநலப் பணி திட்ட மாணவர்களுக்கான இணையவழி விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

அதில் சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை திட்அதிகாரி வி.கலையரசன் பங்கேற்றுபேசியதாவது:

தமிழக அரசு 15 ஆண்டுகளுக்குமுன்பே மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தொடங்கிவிட்டது. அதன் தொடர்ச்சியாக மாநகருக்குள் அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கே முன்மாதிரியாக உள்ளது. இதுமட்டுமல்லாது, கூவம்ஆற்றில் ரூ.649 கோடி செலவிலும், அடையாறு ஆற்றில் ரூ.555 கோடி செலவிலும் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த 2 ஆறுகளும், அடுத்தஇரு ஆண்டுகளில் மக்கள் விரும்பும் பசுமை படர்ந்த, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பகுதிகளாக மாறும். எந்த திட்டத்தையும் மக்கள் பங்களிப்பு இல்லாமல் செயல்படுத்த முடியாது. எனவேஆற்றின் கரையோரம் உள்ளமாணவர்கள், சீரமைக்கப்பட்ட ஆறுகளை இனியும் மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என்றார்.

இதைத் தொடர்ந்து அறக்கட்டளையின் சமூகப்பணி வல்லுநர் ஜெ.ஜெயந்த் பங்கேற்று, அறக்கட்டளை சார்பில் மேற்கொள்ளப்பட்ட அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா திட்டம் மற்றும் ஆறுகள் சீரமைப்பு திட்டப் பணிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x