Published : 15 Aug 2020 06:46 AM
Last Updated : 15 Aug 2020 06:46 AM

சுதந்திர தினத்தையொட்டி ‘மியூசிக்கல் டாக்டர்ஸ்’ குழு பாடல் வெளியீடு: மருத்துவத்தின் பெருமை பற்றி 50 டாக்டர்கள் பாடியுள்ளனர்

சுதந்திர தினத்தையொட்டி மருத்துவத்தின் பெருமைகள் குறித்து ‘மியூசிக்கல் டாக்டர்ஸ்’ குழு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 50 டாக்டர்கள் பாடிய இந்தப் பாடல்சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய சுதந்திர தினம் இன்றுகொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ‘மியூசிக்கல் டாக்டர்ஸ்’ என்ற குழுவைச் சேர்ந்த டாக்டர்கள்,குழந்தை மருத்துவம், மகப்பேறு, பொது மருத்துவம், எலும்புமுறிவு, மயக்கவியல், கண், பல் மருத்துவம் உள்ளிட்ட 15 மருத்துவத் துறைகளின் பெருமைகளை விளக்கி பாடியுள்ளனர்.

‘பாரத விலாஸ்’ என்ற படத்தில் வரும் ‘இந்திய நாடு என் வீடு’ எனும்பாடலின் இசையில் 50 டாக்டர்கள்இணைந்து பாடிய வீடியோ பதிவைஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளனர். டாக்டர்களின்வித்தியாசமான இந்த முயற்சிபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இக்குழு ஏற்கெனவே கரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளனர். அந்த பாடலும் பெரும் வரவேற்பை பெற்றது.

இதுதொடர்பாக மருத்துவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள திருப்பூரைச் சேர்ந்த மயக்கவியல் டாக்டர் ரமேஷ் கூறியதாவது:

‘மியூசிக்கல் டாக்டர்ஸ்’ குழுவில்100 டாக்டர்கள் உள்ளனர். எங்களுக்கு யூடியூப் சேனல், வாட்ஸ்அப் குழு இருக்கிறது. முதல்முறையாக கரோனா விழிப்புணர்வுக்காக சொந்தமாக பாடல் வரிகளை எழுதி பாடி வெளியிட்டோம். அந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது, சுதந்திர தினத்துக்காக பாடலை பாடியிருக்கிறோம். ‘பாரத விலாஸ்’ படத்தில் வரும் ‘இந்திய நாடு என் வீடு’ என்ற பாடலின் இசையை தேர்வு செய்தோம்.அந்த பாடலின் இசைக்கு ஏற்றபடிபாடல் வரிகள் எழுதப்பட்டது. ‘பாரத நாடு நம் நாடு... பாதுகாப்பதே நம் பாடு’.. என்று தொடங்கும்பாடலில் 15 மருத்துவத்தின் பெருமைகளை எடுத்துரைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x