Last Updated : 14 Aug, 2020 09:59 PM

 

Published : 14 Aug 2020 09:59 PM
Last Updated : 14 Aug 2020 09:59 PM

காரைக்குடி அருகே 80 ஏக்கரில் சீமைக்கருவேல மரங்களை அழித்து பசுமையாக மாற்ற முயற்சி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 74-வது சுதந்திர தினத்தையொட்டி 80 ஏக்கரில் இருந்த சீமைக்கருவலே மரங்களை அழித்து, வேறு மரக்கன்றுகளை நட்டு பசுமையாக மாற்றும் முயற்சியில் மகிழ்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

சிவகங்கை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற சில ஆண்டுகளுக்கு முன்பு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த சமயத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டது. அதன்பிறகு கண்டுகொள்ளாததால் மீண்டும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துவிட்டன.

இந்நிலையில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி, பிற மரக்கன்றுகளை நடவு செய்ய காரைக்குடியைச் சேர்ந்த மகிழ்ச்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக 74-வது சுதந்திர தினத்தையொட்டி காரைக்குடி அருகே பிளார் பகுதியில் 80 ஏக்கரில் இருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றியுள்ளது. தொடர்ந்து அப்பகுதியை பசுமையாக்க, பிற மரக்கன்றுகளை நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை கல்லல் இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு, தேவகோட்டை தனிவட்டாட்சியர் பாலாஜி தொடங்கி வைத்தனர்.

மகிழச்சி நிறுவன உரிமையாளர் சிவக்குமார், செயல் தலைவர்கள் ஜார்ஜ்வில்லியம், சிங்கராயர், முத்துராமலிங்கம், இளையராஜா, பொன்மணி சங்கர், ஆறுமுகம், மகிழ்ச்சி ரிசார்ட் செயல் தலைவர் ராஜ்குமார், திட்ட இயக்குநர் முருகேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x