Published : 14 Aug 2020 16:39 pm

Updated : 14 Aug 2020 16:39 pm

 

Published : 14 Aug 2020 04:39 PM
Last Updated : 14 Aug 2020 04:39 PM

ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் வியாபாரம் துவங்குதல் குறித்த 3-நாள்  இணையவழி கருத்தரங்கம்: பதிவு தொடங்கியது

3-day-online-seminar-on-export-opportunities-starting-a-business-registration-has-started

தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் நடத்தும் இணையவழி மூலம் ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் வியாபாரம் துவங்குதல் பற்றிய 3 நாள் பயிற்சி வரும் ஆகஸ்டு 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை காலை 10.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:


“ உலகமயமாக்கலின் விளைவாக, ஏற்றுமதி வர்த்தகத்திற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்பயிற்சியில் ஏற்றுமதி வர்த்தகத்தின் அடிப்படைகள், அதிக வாய்ப்புள்ள பொருட்கள் / நாடுகள் கண்டறிதல் ஏற்றுமதி தொழில் துவங்க தேவையான அரசு பதிவுகள் செய்யும் முறை GST / IEC /RCMC, ஏற்றுமதி விலை நிர்ணயம் மற்றும் பாதுகாப்பாக பணம் பெறும் முறைகள் குறித்து விவாதிக்கப்படும்.

மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதி ஆணை செயலாக்கம் மற்றும் ஏற்றுமதிக்கு உதவிடும் அரசு மற்றும் தனியார் சேவை அமைப்புகள் , ஏற்றுமதி வளர்ச்சி திட்டங்கள் , ஊக்க தொகைகள் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.

ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண் / பெண் இருபாலரும் சேரலாம். இப்பயிற்சி நடக்கும் இடம், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை- 600 032 ஆகும்.

இப்பயிற்சியில் சேர விரும்புவோர் தங்கள் பெயரை நேரிலோ அல்லது தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இணையதளம் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள். 9444556099, 9444557654, www.editn.in முன்பதிவு அவசியம்.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032”.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறவிடாதீர்!


3-Day Online SeminarExport OpportunitiesStarting a BusinessRegistration has startedஏற்றுமதி வாய்ப்புகள்வியாபாரம் துவங்குதல்இணையவழி கருத்தரங்கம்பதிவு தொடங்கியது

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author