

இந்திய அரசு 2020 ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையர் உட்பட தமிழ்நாடு காவல்துறையின் 23 அலுவலர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவருக்கான மெச்சத்தகுந்த பணிக்கான, தகைசால் பணிக்கான விருதுகளை அறிவித்துள்ளது.
இதுகுறித்த டிஜிபி அலுவலக செய்திக்குறிப்பு வருமாறு:
“மெச்சத்தகுந்த, தகைசால் விருதுகள் அனைத்திந்திய அளவில் தனிச்சிறப்புடன் பணியாற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய நாட்களில் ஆண்டிற்கு இருமுறை வழங்கப்படுகின்றன. காவல்துறை அலுவலர்களின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்திய குடியரசு இந்திய குடியரசு இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான (President’s Police Medal for Distinguished Service) காவல் விருதுகள் காவல் விருதுகள் காவல் விருதுகள் தமிழ்நாடு காவல்துறையின் அலுவலர்கள் இருவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
அவர்களின் பெயர் பின்வருமாறு:
(1) ஆண்டனி ஜான்சன் ஜெயபால், தளவாய், தமிழ்நாடு சிறப்புக்காவல் 2ஆம் அணி, ஆவடி.
(2) ரவிசந்திரன், தளவாய், தமிழ்நாடு சிறப்புக்காவல்
இந்திய குடியரசு இந்திய குடியரசுதலைவரின் பாராட்டத்தக்க தலைவரின் மெச்சத் தகுந்த பணிக்கான (President’s Police Medal for Meritorious Service) காவல் விருதுகள் தமிழ்நாடு காவல்துறையின் 21 அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அவர்களின் பெயர் பின்வருமாறு:
(1) சத்திய பிரியா, டிஐஜி, பயிற்சி,சென்னை,
(2) ஈ.எஸ். உமா, காவல்துறை துணை ஆணையாளர், குற்றம்,
கோயம்புத்தூர் மாநகர்,
(3) திரு.ரா. திருநாவுக்கரசு, காவல்துறை துணை ஆணையாளர், நுண்ணறிவு பிரிவு-1, சென்னை பெருநகர காவல்.
(4) வெ. விஸ்வேஸ்வரைய்யா காவல் உதவி ஆணையர், நீலாங்கரை, தெற்கு மண்டலம், சென்னை பெருநகர காவல்.
(5) யுவராஜ், காவல் உதவி ஆணையாளர், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள், சென்னை.
(6) மெக்ளரின் எஸ்கால், காவல் துணைக் கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, திருநெல்வேலி.
(7) ரவிசந்திரன், காவல் துணைக் கண்காணிப்பாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை, சென்னை.
(8) சார்லஸ் சாம் ராஜதுரை, காவல்துறை உதவி ஆணையாளர், நுண்ணறிவு பிரிவு, சென்னை.
(9) சத்தியசீலன், காவல் துணைக் கண்காணிபாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, மதுரை.
(10)மனோகரன், காவல் துணைக் காண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, தஞ்சாவூர்.
(11) மெல்வின் ராஜா சிங், காவல் துணைக் கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, கடலூர்.
(12) சசிகுமார், காவல் ஆய்வாளர், சிறப்பு இலக்கு படை, ஈரோடு,
(13) இருதயம், காவல் ஆய்வாளர், கடலோர பாதுகாப்பு குழுமம், சென்னை,
(14) இம்மானுவேல் ஞானசேகர், காவல் ஆய்வாளர், தனி பிரிவு குற்றப்புலனாய்வு துறை, சென்னை.
(15) இளங்கோவன், காவல் ஆய்வாளர், எஸ்-5 பல்லாவரம் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையம், தெற்கு மண்டலம், சென்னை.
(16) சுந்தரராஜன், காவல் ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, திண்டுக்கல்.
(17) கந்தசாமி, காவல் ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, நகர சிறப்பு பிரிவு- 1, சென்னை.
(18) ஆம்புரோஸ் ஜெயராஜா,காவல் ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, மதுரை.
(19) பாலகிருஷ்ணன், காவல் உதவி ஆய்வாளர், பாதுகாப்பு பிரிவு குற்றப்புலனாய்வு துறை,
சென்னை.
(20) விஸ்வநாதன், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, சேலம்.
(21) பிரகலாதன் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, சிறப்பு புலனாய்வு குழு, சென்னை.
ஆகியோருக்கு குடியரசுத்தகைவரின் மெச்சத்தகுந்தப்பணிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது”.
இவ்வாறு டிஜிபி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.