Published : 14 Aug 2020 08:34 AM
Last Updated : 14 Aug 2020 08:34 AM

மதுரைப்பாக்கம் - பொன்மார் இடையே இருவழி பாலம் 4 வழி பாலமாக விரிவாக்கம்: ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் அமைகிறது

மேடவாக்கம் - பொன்மார் சாலையின் இடையே மதுரைப்பாக்கம் ஓடையின்மீது உள்ள 2 வழிப் பாலத்தை 4 வழிப் பாலமாக மாற்றும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டுள்ளனர். படம் : எம்.முத்துகணேஷ்

தாம்பரம்

மேடவாக்கம் - பொன்மார் சாலைவிரிவாக்கத்துக்காக ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் இருவழிப் பாலத்தை 4 வழிப் பாலமாக மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இதனால் தாம்பரம் நெடுஞ்சாலை கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மேடவாக்கம் முதல் பொன்மார் வரையில் 4 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி 3 கட்டங்களாக ரூ.8 கோடி மதிப்பீட்டில் நடைபெறுகிறது. இதேபோல் மழைநீர்வடிகால்வாய் பணியும் சாலையில் இரு பக்கங்களிலும் நடைபெறுகிறது.

இந்நிலையில் பொன்மாரில் உள்ள இருவழிப் பாலத்தை ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் 4 வழிப் பாலமாக மாற்றும் நடவடிக்கையில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் ஒருவர் கூறியதாவது: மக்கள் பயன்பாட்டுக்கு வசதியாக மேடவாக்கம் முதல் பொன்மார் வரை 8 கி.மீ. தூரம்மழைநீர் வடிகால் வசதியுடன் சாலை விரிவாக்கப் பணி நடைபெறுகிறது. இதில் மதுரைப்பாக்கம் - பொன்மார் இடையே மதுரைப்பாக்கம் ஓடை மீது உள்ள 2 வழிப் பாலத்தை 4 வழிப் பாலமாக மாற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. 6 மாதங்களில் பணி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x