

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு ‘குறையொன்றுமில்லை’ என்ற நிகழ்ச்சி பொதிகை தொலைக் காட்சியில் இன்று முதல் 52 வாரங்களுக்கு ஒளிபரப்பாகிறது. தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி யுடன் இணைந்து இந்நிகழ்ச் சியை ‘தி இந்து’ வழங்கு கிறது.
‘பாரத ரத்னா’ எம்.எஸ்.சுப்பு லட்சுமியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா வரும் 16-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதை சிறப்பிக்கும் வகையில் ‘குறையொன்று மில்லை’ என்ற பெயரிலான அவ ரது வாழ்க்கைச் சித்திரம் இன்று முதல் தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப் பப்படுகிறது. 30 நிமிடம் நடை பெறும் இந்நிகழ்ச்சி வாரம்தோறும் ஒளிபரப்பாகும்
137 ஆண்டுகால பாரம்பரியம் மிக்க ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுடன் இணைந்து, 40 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் பொதிகை தொலைக்காட்சி இந்த நிகழ்ச்சியை வழங்குகிறது.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குடும்பம், இசை ஆளுமை, திறமை, அவரது சாதனைகள் உட் பட பல்வேறு அம்சங்கள் பற்றி யும் இசை ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் முழுமை யாக அறிந்துகொள்ளும் வகையி லான இந்த வாழ்க்கை சித்திரம் தொடர்ந்து 52 வாரங்கள் ஒளிபரப் பாக உள்ளது. ‘தி இந்து’ ஆங் கில நாளிதழின் ஆவணக் காப் பகத்தில் உள்ள பல அரிய புகைப் படங்கள், எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றிய அரிய தகவல்களும் நிகழ்ச்சியில் இடம்பெற உள் ளன.
இதுதொடர்பான புரிந் துணர்வு ஒப்பந்தத்தில் தூர்தர்ஷன் நிகழ்ச் சிப் பிரிவு தலைமை அதிகாரி சி.எம்.ராமச்சந்திரா, ‘தி இந்து’ தலைமை செயல் அதிகாரி ராஜீவ் சி.லோச்சன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
பொதிகையில் இன்று தொடங்கி சனிக்கிழமை தோறும் இரவு 9.30 மணிக்கு ‘குறையொன்றுமில்லை’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது இதன் மறு ஒளிபரப்பை செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்குப் பார்க்கலாம்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சிக்கான ஆராய்ச்சி மற்றும் எழுத்துப் பணிகளை சங்கர் வெங்கட்ராமன் கவனிக்கிறார். கேள்வி பதில், புதிர் போட்டிகள், பரிசுகள் என்று பார்வையாளர்களைக் கவரும் விதமாக நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கிறது.