ஒட்டகம் மேய்த்த கம்பம் இளைஞரிடம் பாஸ்போர்ட் ஒப்படைப்பு: ‘தி இந்து’ செய்தியால் தமிழகம் திரும்புவதால் உறவினர்கள் மகிழ்ச்சி

ஒட்டகம் மேய்த்த கம்பம் இளைஞரிடம் பாஸ்போர்ட் ஒப்படைப்பு: ‘தி இந்து’ செய்தியால் தமிழகம் திரும்புவதால் உறவினர்கள் மகிழ்ச்சி
Updated on
1 min read

‘தி இந்து’ செய்தி எதிரொலியால் குவைத்தில் ஒட்டகம் மேய்த்த கம்பம் இளைஞரிடம் அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும் வீடியோ ஆதாரம், தேனி மாவட்ட போலீஸாருக்கு நேற்று அனுப்பப்பட்டுள்ளது.

கம்பம் தாத்தப்பன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இமாம்ஷா. இவரது மூத்த மகன் இஸ்மாயில். 2-வது மகன் சதாம் உசேன். 8 மாதங்களுக்கு முன் குவைத்தில் டிரைவர் வேலைக்குச் சென்ற இஸ்மாயில் கைநிறைய சம்பாதிப் பதால், அவரை அனுப்பி வைத்த கும்பகோணம் ஏஜெண்ட் காஜாமைதீன் மூலம், சதாம் உசேனும் கடந்த 2 மாதங்களுக்கு முன் டிரைவர் வேலைக்கு குவைத் சென்றார்.

ஆனால், சதாம் உசேனுக்கு டிரைவர் வேலை கொடுக்காமல் அங்குள்ள பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்க விட்டுள்ளனர். அவர் மறுத்ததால் அரபிகள் பாஸ் போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டு சரியாக சாப்பாடு, ஊதியம் வழங்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த சதாம் உசேன், தனது அவல நிலையை வாட்ஸ்அப் மூலம் நண்பர்களுக்கு அனுப்பினார். அதில் தன்னைக் காப்பாற்ற தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதுகுறித்து ‘தி இந்து’ நாளி தழில் கடந்த செப். 14, 15-ம் தேதிகளில் செய்தி வெளியானது. இதையடுத்து, சதாம் உசேனை மீட்க தேனி மாவட்ட நிர்வாகமும், போலீஸாரும், தமிழக அரசு மூலம் துரித நடவடிக்கை மேற்கொண் டனர்.

இந்நிலையில், செய்தி வெளி யான ஒரே நாளில் குவைத்தில் ஒட்டகம் மேய்க்கும் இடத்தில் இருந்து சதாம் உசேன் மீட்கப்பட்டு, அவரது அண்ணன் இஸ்மாயிலிடம் ஒப்படைக்கப்பட்டார். நேற்று பிற் பகலில் சதாம் உசேனிடம் பாஸ் போர்ட்டை அரபிக்காரர் ஒப்ப டைத்தார். அதற்கான வீடியோ ஆதாரம், தேனி மாவட்ட போலீ ஸாருக்கு அனுப்பப்பட்டது. இதனால், கம்பத்தில் சதாம் உசேனின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கம்பம் வடக்கு காவல் உதவி ஆய்வாளர் சுல்தான் பாட்ஷா நேற்று கூறியதாவது: சதாம் உசேனிடம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும் வீடியோ ஆதா ரத்தை கும்பகோணம் ஏஜெண்ட் காஜாமைதீன் எங்களுக்கு அனுப்பி உள்ளார். ஓரிரு நாட் களில் அவரை தமிழகத்துக்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளார். சதாம் உசேனும், தற்போது எந்த தொந்தரவும் இல்லாமல் இருப்பதாக தெரிவித்த வீடியோ ஆதாரமும் எங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குவைத்தை பொறுத்தவரை 3 மாதம் வரை ஊதியம் வழங்க மாட்டார்களாம். அதனால், அவருக்கு ஊதியத்தை பெற்றுக் கொடுப்பதில் மட்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in