

மயிலாடுதுறை அரசு மருத்துவ மனையில் 200 படுக்கைகள் கொண்ட புதிய கட்டிடத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஏற் கெனவே 150-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், நேற்று முன்தினம் 55 நோயாளிகள் வந்ததால் அனுமதிக்கப்பட்டுள் ளோர் எண்ணிக்கை 202 ஆனது.
இதையடுத்து, நேற்று புதிதாக வந்த கரோனா நோயாளிகள் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மேலும், மயிலாடுதுறை அரசு மருத்துவ மனையில் 7 நாட்கள் சிகிச்சை பெற்றவர் களை, அவரவர் வீடுக ளுக்கு சென்று தனிமைப்ப டுத்திக் கொள்ளுமாறும், டிஸ்சார்ஜ் அறிக்கையை பெற்றுக்கொள்ளு மாறும் மருத்துவமனை ஊழியர் கள் நோயாளிகளிடமும் நோயாளி களின் உறவினர்களிடமும் வற்பு றுத்தினர். இதனால் மருத்துவ மனை ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்திருக்கும் நிலையில் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டார் கள் என்று நோயாளிகளின் உறவினர்கள் கூறியதற்கு, எங்க ளால் வேறு எதுவும் செய்ய முடி யாது என்று மருத்துவமனை ஊழி யர்கள் கூறியுள்ளனர். மருத்து வமனை ஊழியர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் குறித்த வீடியோ பதிவு வாட்ஸ் அப்-ல் வைரலான தால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து நாகை மாவட்ட கொள்ளை நோய் மருத்துவ அலுவலர் டாக்டர் லியாகத் அலியிடம் கேட்டபோது, “டெஸ்ட் கொடுத்த தேதியிலிருந்து 10 நாட்கள்தான் மருத்துவமனையில் நோயாளிகள் தங்க முடியும் என்பது அரசு விதி. புறநோயாளியாக வந்து டெஸ்ட் செய்துகொள்ளும் ஒருவர், பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தவுடன் 2 அல்லது 3 நாட்களுக்கு பிறகுதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். அதனால் அவர்கள் 7 நாட்கள்தான் மருத்துவ மனையில் இருந்தோம் என்பார்கள். ஆனால், டெஸ்ட் கொடுத்த நாளி லிருந்து கணக்கு பார்த்தால் 10 நாட்கள் ஆகியிருக்கும். கரோனா பாதிப்பு குறைவாக இருந்தபோது நாள் கணக்கு பார்க்காமல் மருத்துவமனையில் நோயாளிகளை தங்க அனுமதித் தோம். தற்போது நோயாளிகளின் வருகை அதிகமாக இருப்பதால் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தி வருகிறோம். எனவே, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.