Published : 13 Aug 2020 07:34 AM
Last Updated : 13 Aug 2020 07:34 AM

பிஎஸ்என்எல் குறித்து சர்ச்சை கருத்து: பாஜக எம்.பி.க்கு தொழிற்சங்கம் கண்டனம்; மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தல்

சென்னை

பிஎஸ்என்எல் நிறுவனம் குறித்துஉண்மைக்கு மாறான தகவல்களை பரப்புவதுடன் அதன் ஊழியர்களை தேசதுரோகிகள் என்று ஆளும் பாஜக எம்.பி.யின் சர்ச்சை கருத்துக்கு ஊழியர்சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அவர்மன்னிப்பு கேட்க வேண்டும்என்றும் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, என்எஃப்டிஇ-பிஎஸ்என்எல் தேசிய மூத்த உதவித்தலைவர் சி.கே.மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசுக்கு 100 சதவீதம் சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பணியாளர்களின் மனஉறுதியைக் குலைக்கும் விதத்தில் அவர்களை தேசதுரோகிகள் என்றும் விரைவில் நிறுவனத்தை தனியார்மயம் செய்து விடுவோம் எனவும் ஆளும் பாஜகவின் கர்நாடக எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே சில தினங்களுக்கு முன்பு பேசியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

முறையற்ற செயல்

மக்கள் பிரதிநிதி ஒருவர் எப்படி பொதுவெளியில் பேச வேண்டும் என்ற மரபை மீறி ஹெக்டே உண்மையற்ற தகவல்களை பரப்பியதன் காரணமாக, மக்களுக்கு தொலைதொடர்பு சேவையை நல்ல முறையில் வழங்கி வரும் ஒரு பொதுத் துறை நிறுவனத்தை அவமானப்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அத்துடன், பிஎஸ்என்எல் நிறுவனத்தை புத்தாக்கம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வரும் வேளையில், தனியார்மயம் ஆக்குவோம் என பேசுவது முறையற்ற செயல். எனவே, அவர் மீது பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித் ஷா,தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x