Published : 13 Aug 2020 07:30 AM
Last Updated : 13 Aug 2020 07:30 AM

தமிழக காவல் துறைக்கு குண்டு துளைக்காத கவச உடைகள்: படைத்துறை உடை தொழிற்சாலை வழங்கியது

மத்திய அரசின் படைத் துறை உடை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட குண்டு துளைக்காத பாதுகாப்பு கவச உடைகள் தமிழக காவல் துறைக்கு வழங்கப்பட்டன.

சென்னையை அடுத்த ஆவடியில் மத்திய பாதுகாப்புத் துறைக்குசொந்தமான படைத் துறை உடை தொழிற்சாலை (ஓசிஎஃப்) செயல்பட்டு வருகிறது.

இந்திய ராணுவம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் காவலர்கள் பயன்படுத்தும் ‘ஆயுத் கவச்’எனும் குண்டு துளைக்காத கவசஆடைகள் மற்றும் எளிதில் தீப்பற்றாத சீருடைகள் ஆகியவற்றை இத் தொழிற்சாலையின் மேம்பாட்டுப் பிரிவு தயாரித்து பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், இத்தொழிற்சாலையில் தமிழக காவல் துறைக்குகுண்டுத் துளைக்காத கவச உடைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. .

இந்த கவச உடைகளை இந்தியபடைத் துறை தொழிற்சாலைகளின் பொது மேலாளர் சுர்ஜித் தாஸ், தமிழக காவல் துறை கூடுதல் டிஜிபி சீமா அகர்வாலிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில், மத்திய ரிசர்வ் காவல் படை ஐஜி சோனல் வி.மிஸ்ரா, அகில இந்திய பாதுகாப்புத் துறை தொழிற்சாலை ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சி.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x