‘இ-சஞ்சீவினி’ திட்டம் மூலம் ஆன்லைனில் இலவசமாக மருத்துவரிடம் ஆலோசனை: மருந்துகள் வாங்க பரிந்துரை சீட்டும் பெறலாம்

‘இ-சஞ்சீவினி’ திட்டம் மூலம் ஆன்லைனில் இலவசமாக மருத்துவரிடம் ஆலோசனை: மருந்துகள் வாங்க பரிந்துரை சீட்டும் பெறலாம்
Updated on
1 min read

ஊரடங்கு அமலில் உள்ளதால்பொதுமக்கள் மருத்துவமனைக்கு செல்லாமல், கரோனா தவிர்த்து பிற பிரச்சினைகளுக்கு ஆன்லைனில் இலவசமாக மருத்துவரின் ஆலோசனை பெறுவதற்காக ‘இ-சஞ்சீவினி ஓபிடி’ என்ற திட்டத்தை மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது.

பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இத்திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தத் திட்டம் தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

இ-சஞ்சீவினி ஓபிடி திட்டத்தால் தமிழகத்தில் 39 ஆயிரம் பேர்பயனடைந்துள்ளனர். இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம்தான் இ-சஞ்சீவினி ஓபிடிதிட்டத்தை சிறப்பாக செயல் படுத்தி வருகிறது.

பொதுமக்கள் இச் சேவையைபயன்படுத்த www.esanjee vaniopd.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது esanjeevaniopd என்ற ஆன்ட்ராய்டு செயலி மூலமாகவோ தங்களுடைய செல்போன் எண்ணைபதிவு செய்து தங்கள் செல்போனுக்கு வரும் கடவு எண்ணை (OTP) பயன்படுத்தி மருத்துவரை சந்திக்க டோக்கன் பெறலாம்.

இதையடுத்து, மருத்துவரைசந்திப்பதற்கான பிரிவில்நுழைந்து, காத்திருப்பு அறைதிரையில் தற்போது அழைக்கவும்(Call Now) என்று வரும்போதுஅந்த உள்ளீட்டை அழுத்தினால்மருத்துவருடன் தொடர்பு கொண்டு காணொலி மூலம் ஆலோசனை பெற முடியும்.

ஆலோசனை முடிந்த பின்னர்மருத்துவரின் கையெழுத்துடன் பரிந்துரை சீட்டை பதிவிறக்கம்செய்யலாம். அந்த சீட்டை வைத்துமருந்துக் கடைகளில் மாத்திரை,மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம். ஏற்கெனவே மருத்துவரை பார்த்த மருத்துவ சீட்டுகள் மற்றும் பரிசோதனை முடிவுகள் இருந்தால் ஆலோசனைக்கு முன்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் மட்டும் ஏழு நாட்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த சேவைவழங்கப்படுகிறது. எச்ஐவி /எய்ட்ஸ் நோயாளிகளுக்கு எனபிரத்யேகமாக மருத்துவர்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரைகாலை 8 மணி முதல் மதியம்1 மணி வரை ஆலோசனைகளை வழங்குகிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் மருத்துவமனைக்கு செல்லாமலேயேமருத்துவ ஆலோசனைகளைப் பெற முடியும். கர்ப்பிணிகள்,குழந்தைகள், முதியோர், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்திட்டம் ஓர் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in