நெல்லை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியது

நெல்லை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியது
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 9 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த உயிரிழப்பு 99 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கியது.

மாவட்டத்தில் நேற்று வரையில் 6801 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று ஒரே நாளில் மேலும் 137 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு 6938 ஆக உயர்ந்தது.

நேற்று வரையில் 90 உயிரிழப்புகள் நேர்ந்திருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 6938 பேரில் 5262 பேர் இதுவரை குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் மட்டும் 366 பேர் குணமடைந்தனர். பல்வேறு மருத்துவமனைகளில் 1577 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in