

கோவை மாவட்டம் நெகமம் பகுதியில் முதியோர் உதவித்தொகை மற்றும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், பெரிய நெகமம், சின்ன நெகமம் மற்றும் சந்திராபுரம் பகுதியில் உள்ள 53 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் 27 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சட்டப் போராட்டத்தை முதல்வர் வென்று, வேதா இல்லத்தை நிச்சயமாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றுவார்’ என்றார்.