

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய கோயில், மசூதி, தர்கா, தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டு தலங்களின் நிர்வாகத்தினர் சம்பந்தப்பட்ட சார் ஆட்சியர்களிடம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள், சிறிய மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டு தலங்களை உரிய அனுமதிபெற்று பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநகராட்சி பகுதிகளில் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோயில்கள், சிறிய மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டுத் தலங்களை திறந்திட அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி அனுமதி வழங்க திருநெல்வேலி, சேரன்மகாதேவி சார் ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே கோயில், மசூதி, தர்கா, தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டு தலங்களின் நிர்வாகத்தினர் சம்பந்தப்பட்ட சார் ஆட்சியர்களிடம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.