Last Updated : 11 Aug, 2020 06:56 PM

 

Published : 11 Aug 2020 06:56 PM
Last Updated : 11 Aug 2020 06:56 PM

மின்மயமாகும் திருச்சி - ராமேஸ்வரம் ரயில்வே வழித்தடம்: தண்டவாள உறுதித்தன்மையை அறிய நாளை சோதனை ஓட்டம்

காரைக்குடி

திருச்சி - ராமேஸ்வரம் ரயில்வே வழித்தடத்தை மின்மயமாக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது.

இதையடுத்து தண்டவாளத்தின் உறுதித்தன்மையை அறிய நாளை (ஆகஸ்ட்.12) சோதனை ஓட்டம் நடக்கிறது.

திருச்சி - ராமேஸ்வரம் ரயில்வே வழித்தடத்தில் டீசல் இஞ்சின் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 80 முதல் 90 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருச்சி - ராமேஸ்வரம் வழித்தடத்தை மின்மயமாக்கும் பணியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

மின்மயமாக்கினால் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் 110 கி.மீ., வரை அதிகரிக்கும். இதையடுத்து கடந்த 4 மாதங்களாக தண்டவாளத்தின் உறுதித்தன்மையை அதிகரிக்கும் பணியை ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இப்பணி முடிந்தநிலையில் நாளை தண்டவாளத்தின் உறுதித்தன்மையை சோதிக்கும் வகையில் திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் வரை 110 கி.மீ. வேகத்தில் சோதனை ஒட்ட ரயில் 2 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.

இதில் ரயில்வே இன்ஜினியர்கள் பயணித்து சோதிக்கின்றனர். மேலும் தற்போது கரோனா ஊரடங்கால் ரயில்கள் இயக்கப்படாததால் பலரும் தண்டவாளம் அருகே செல்கின்றனர்.

இன்று சோதனை ஓட்ட ரயில் செல்வதால், காலை 6 முதல் மாலை 6 மணி வரை தண்டவாளம் அருகே பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x