தேயிலை தோட்ட மண் சரிவில் உயிரிழந்த ஓட்டப்பிடாரம் பகுதி தொழிலாளர் குடும்பத்துக்கு அமைச்சர் நிதியுதவி

ஓட்டப்பிடாரம் அருகே கோவிந்தபுரத்தில், கேரள மாநில மண் சரிவில் உயிரிழந்த தொழிலாளர்களின் படங்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அஞ்சலி செலுத்தினார்.
ஓட்டப்பிடாரம் அருகே கோவிந்தபுரத்தில், கேரள மாநில மண் சரிவில் உயிரிழந்த தொழிலாளர்களின் படங்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அஞ்சலி செலுத்தினார்.
Updated on
1 min read

கேரள மாநிலம் தேயிலைத் தோட்டத்தில் நடந்த மண் சரிவில் சிக்கி உயிரிழந்த ஓட்டப்பிடாரம் அருகே கோவிந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ நிதி உதவி வழங்கினார்.

கேரள மாநிலம் மூணாறு ராஜமலை பெட்டிமுடி தேயிலைத் தோட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவில் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் கீழக்கோட்டை ஊராட்சி கோவிந்தபுரம் கிராமத்தை சேர்ந்த கண்ணன், அவரது மகள் நதியா(12), விஷ்ணு(11), விஜயலட்சுமி(11) ஆகியோர் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று கோவிந்தபுரத்தில் உள்ள அவரது உறவினர்களை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த மரணமடைந்தவர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும், தனது சொந்த நிதியில் இருந்து, உயிரிழந்த கண்ணனின் சித்தப்பா மோகனிடம் ரூ.25 ஆயிரத்தை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கோட்டாட்சியர் விஜயா, ஓட்டப்பிடாரம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் எலிசபெத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன்பொன்மணி, வளர்மதி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் தேவராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in