

கரோனா ஊரடங்கு அமல்படுத் தப்பட்டுள்ள நிலையில் கோவை யில் தேசியக் கொடி தயாரிப்பும், ஆர்டர்களும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரி விக்கின்றனர்.
இதுகுறித்து கோவை பெரியகடைவீதியில் தேசியக்கொடி தயாரிக்கும் பணியில்ஈடுபட்டுள்ள ராஜேந்திரன் கூறிய தாவது: சுதந்திர தினம், குடியரசு தினத்துக்காக கோவையில் பல்வேறு அளவுகளில், கதர் துணி, வெல்வேட் துணி உள்ளிட்டவற்றால் தேசியக் கொடி தயாரிக் கப்படும். குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.2 ஆயிரம் வரை பல்வேறு விலைகளில் கொடிகள் விற்பனையாகும்.
வழக்கமாக சுதந்திர தினத்துக்கு 3 மாதங்களுக்கு முன்பே தேசியக் கொடி உற்பத்தி களைகட்டும். பள்ளி, கல்லூரிகள், அரசு, தனியார் அலுவலகங்களைச் சேர்ந்தவர்கள் கொடிகளை வாங்கிச் செல்வர். கோவை மட்டுமின்றி, மாவட்டங்கள், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்தும் தேசியக் கொடிகளை வாங்கிச் செல்வர்.
நாங்கள் துணியை வாங்கி, தையல்காரர்கள் மூலம் வைப்போம். பின்னர், கொடியின் அளவுக்கு ஏற்ப அசோக சக்கரத்தை பதித்து, விற்பனைக்கு அனுப்புவோம். ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு அளவுகளில் 1.50 லட்சத்துக்கும் அதிகமான கொடிகள் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படும். ஆனால், நடப்பாண்டு கரோனா அச்சத்தால் தேசியக் கொடி ஆர்டர்கள் குறைந்து, தயாரிப்பும் பெருமளவு குறைந்துவிட்டது. பள்ளி, கல்லூரிகள் இல்லாததால் ஆர்டர்கள் பெருமளவு குறைந்துவிட்டன. இதனால் கொடி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள், தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.