

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1.29 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, அணையின் நீர்மட்டம் 91.93 அடியாக உயர்ந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 90 ஆயிரம் கனஅடியாகவும், நீர்மட்டம் 75.83 அடியாகவும் இருந்தது. நேற்று இரவு நீர்வரத்து விநாடிக்கு 1.29 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. இதனால், நீர்மட்டம் 16 அடி அதிகரித்து 91.93 அடியானது. அணையின் நீர் இருப்பு 54.83 டிஎம்சி நீர் உள்ளது.
டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.