

தாம்பரம் அருகே பெரும்பாக்கத்தில் உள்ள ஏரியை ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றும் பணியில் பொதுப்பணித் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தாம்பரம் அருகே உள்ள பெரும்பாக்கம் ஏரியை சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்து ரூ.3.40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
200 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியைச் சுற்றிலும் தடுப்புச் சுவர் அமைத்து, பூங்காவாக மாற்றி ஏரிக்கரைகளில் நடைபயிற்சி தளமும் அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தே.குஜ்ராஜ் கூறியதாவது: ஏரியின் கரையோரங்களில் நூற்றுக்கணக்கான அழகிய செடிகள், அரிய வகை மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்பட உள்ளன. ஏரியைச் சுற்றி பாதுகாப்பு வேலி, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இந்த ஏரியில் உள்ள சில ஆக்கிரமிப்பு காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை வருவாய்த் துறை அகற்றினால் பணிகள் விரைவாக நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.