Published : 11 Aug 2020 07:34 AM
Last Updated : 11 Aug 2020 07:34 AM

147 நாட்களுக்கு பிறகு தனியார் உடற்பயிற்சி கூடங்கள் திறப்பு: விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்

தமிழகத்தில் மூடப்பட்டிருந்த உடற்பயிற்சிக் கூடங்கள் 147 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டன. விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து ஊரடங்குக்கு முன்னதாக மார்ச் 16-ம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்களை மூட அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்பிறகு ஊரடங்கு 7 கட்டமாக நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ளது. ஆனாலும், பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே தனியார் உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் முதல்வர் பழனிசாமியை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் திறக்க அரசு அனுமதி வழங்கியது.

அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உடற்பயிற்சிக் கூடங்கள் நேற்று திறக்கப்பட்டன. கிருமிநாசினி மூலம் கைகளை தூய்மைப்படுத்திய பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டது குறித்து தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்க பொதுச் செயலர் எம்.அரசு கூறியதாவது: தற்போது சிறிய கூடங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. இரவு 7 மணியுடன் கூடங்களை மூட அரசு அறிவுறுத்திஉள்ளது. வேலைக்கு செல்லும் பலர், இரவு 7 மணிக்கு பிறகுதான் வருவார்கள். அதனால், இரவு 9 மணி வரை அரசு அனுமதிக்க வேண்டும் என்றார்.

மாநகராட்சி கூடங்கள்

சென்னை மாநகராட்சி சார்பில்96 உடற்பயிற்சிக் கூடங்கள் இயக்கப்படுகின்றன. இங்கு கட்டணம்வசூலிப்பதில்லை. தனியார் உடற்பயிற்சி கூடங்களைத் திறக்கஅரசு அனு மதித்துள்ள நிலையில்,மாநகராட்சி உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க அனுமதிக்கவில்லை. இவற்றையும் திறக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x