

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக நீலகிரியில் கனமழையும், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:
“வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த மாவட்டங்களின் விவரம் (செ.மீ.):
தேவலா (நீலகிரி) 12, ஏற்காடு(சேலம் ) 10, வால்பாறை (கோவை ) 9, சின்னக்கல்லாறு (கோவை) 8, சின்கோனா (கோவை), பந்தலூர் (நீலகிரி) பகுதிகளில் தலா 7, ஹாரிசன் எஸ்டேட் (நீலகிரி), சோலையாறு (கோவை) பகுதிகளில் தலா 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
ஆகஸ்ட் 10
கேரளா- கர்நாடகா, கோவா கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
தென் மேற்கு , மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 11
கேரளா- கர்நாடகா , கோவா கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 12
தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்”.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.