

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று ஜூலை முதல் தீவிரமடையத் தொடங்கிய நிலையில் தற்போது கிராமப்புறங்களில் கரோனா தொற்று பரவுவது தீவிரமடைந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு தொடக்கத்தில் குறைவாக இருந்தது, ஜூலை மாதம் தொடக்கம் முதல் அதிகரிக்கத் தொடங்கியது.
இரண்டு இலக்க எண்களில் வெளியான கரேனா தொற்று முடிவுகள், ஜூலை மாதத்தில் தினமும் அதிகரித்து பரிசோதனை முடிவுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்று இலக்க எண்ணாக வெளியாகியது.
ஜூலை 26-ம் தேதி ரேநாளில் இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் அதிகப்பட்சமாக 203 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து தினமும் குறைந்தபட்சம் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவது தொடர்கிறது. இதுவரை 71 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது தான் கரோனா தொற்று பாதிப்பு தீவிரமடையத் தொடங்கியுள்ளது போல் தினமும் வெளியாகும் பரிசோதனை முடிவுகள் உள்ளது. நேற்று மட்டும் 131 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை மொத்தம் 3878 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நத்தம் கிராமப்பகுதிகளில் தொற்றின் பாதிப்பு அதிகரிக்கவே ஊர் மக்களே, அதிகாரிகளுடன் கலந்துபேசி 10 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்துள்ளனர். நாளை முதல் 20-ம் தேதி வரை நத்தம் உள்பட 4 ஊராட்சிகளில் முழு ஊரடங்கு அமலாகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்புறங்களில் கடந்த மூன்று மாதங்களாக அதிகரித்துவந்த கரோனா பாதிப்பு, தற்பாது கிராமப்புறங்களில் பரவத்தொடங்கி பாதிப்புகள் அதிகமாகிவருகிறது. தற்போது தான் திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.