Published : 10 Aug 2020 12:23 PM
Last Updated : 10 Aug 2020 12:23 PM

மிகவும் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயி

கரூர் மாவட்டம் சோமூரைச் சேர்ந்த விவசாயி செ.க.பாலசுப்பிர மணியன், ‘இந்து தமிழ்- உங்கள் குரல்' பகுதியில் தெரிவித்துள்ளது:

சோமூரில் உள்ள தனது வயல் வழியாக செல்லும் வகையில் மின்கம்பி அமைக்கப்பட்டிருந்தது. கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் பக்கத்து நிலத்தில் உள்ள மின் கம்பம் முறிந்து விழுந்தது. அதற்கு பதிலாக புதிய மின் கம்பம் அமைக்காமல், பழைய மின்கம்பத்தில் இரும்புக் கம்பி யால் ஒட்டுப்போட்டு மின் கம்பி களை அடுத்த மின் கம்பத்துக்கு கொண்டு செல்லும் வகையில் சரி செய்துவிட்டனர். இதனால் என் வயலில் 6 அடி உயரத்தில் மின் கம்பி மிக தாழ்வாக செல்கிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் கரும்பு விவசாயம் செய்தபோது மின் கம்பி உரசி தீ விபத்து ஏற்பட்டது.

அதன்பின்னர், மின் கம்பி தாழ்வாக செல்வதால் அச்சத்தின் காரணமாக அந்த வயலில் எந்த வகை விவசாயமும் செய்ய வில்லை. மேலும், இவ்வழியே கால்நடைகள், மனிதர்கள் செல்வதால் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. இதுகுறித்து மின் வாரியத்திடம் தெரிவித்தபோது, மின் கம்பத்தை மாற்றி தருவதா கக்கூறினர். ஆனால், இரண்டரை ஆண்டுகளாகியும் சீரமைக்காத தால், மழைக்காலங்களில் மிகுந்த அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, அசாம்பாவிதங்கள் நிகழும் முன் மின் கம்பத்தை மாற்றி மின் கம்பியை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.

இதுகுறித்து ஒத்தக்கடை துணை மின் நிலையத்தில் கேட்டபோது, “இப்பகுதியில் இதுபோன்ற பிரச்சினை அதிகளவில் உள்ளது. மிகக் குறைந்த பணியாளர்களே இருப்பதால் இவற்றை சீரமைக்க முடியவில்லை. சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து உரிய நட வடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x