

சுற்றுச்சூழல் குறித்த பொதுமக்கள் புகார்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க ஏதுவாக புதிய மென்பொருள் வசதி ஏற்படுத்தப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் பேசியதாவது: பொதுமக்கள் அளிக்கும் சுற்றுச்சூழல் குறித்த புகார்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க ஏதுவாக ரூ.25 லட்சத்தில் புதிய மென்பொருள் பயன்படுத்தப்படும்.
வேலூர், திருச்சி மற்றும் நெல்லையில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்கள் ரூ.1.50 கோடியில் தரம் உயர்த்தப்பட்டு 33 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும் என்றார்.