

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள பாடியநல்லூர் பகுதியில் வசிக்கும் சுதந்திரப் போராட்ட தியாகிகளான சந்தியாகு (94), கணேசன்(93) இருவரும், 1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவர்களை கவுரவிப்பதற்காக, இந்திய குடியரசு தலைவர் அங்கவஸ்திரம் மற்றும் சால்வையை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதையடுத்து, சுதந்திர போராட்ட தியாகிகள் சந்தியாகு, கணேசன் ஆகியோரின் வீடுகளுக்கு நேற்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி நேரில் சென்று, குடியரசு தலைவர் அனுப்பிவைத்த அங்கவஸ்திரம் மற்றும் சால்வை ஆகியவற்றை அணிவித்து, பரிசுப்பொருட்களை அளித்து கவுரவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, பொன்னேரி கோட்டாட்சியர் வித்யா, பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.