சுவாமி தயானந்த சரஸ்வதியின் 90-வது ஜெயந்தி விழா: ரிஷிகேஷில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன

தமிழகத்தைச் சேர்ந்த சுவாமி தயானந்த சரஸ்வதியின் 90-வது ஜெயந்தி விழா அவரது சமாதி அமைந்துள்ள ரிஷிகேஷ் ஆசிரமத்தில் நேற்று  நடைபெற்றது. இதில் சுவாமி தயானந்தரின் முதன்மை சீடரும், ஆர்ஷ வித்யா பீடத்தின் துணை தலைவருமான சுவாமி சாக்ஷாத்க்ருதானந்த சரஸ்வதி, சுவாமி தயானந்தரின் அதிஷ்டானத்தில் வைதீக முறைப்படி அபிஷேக ஆராதனைகள் செய்தார்.

Updated on
1 min read

சுவாமி தயானந்த சரஸ்வதியின் 90-வது ஜெயந்தி விழா ரிஷிகேஷில் நேற்று நடைபெற்றது.

தமிழகத்தை சேர்ந்த சுவாமி தயானந்த சரஸ்வதியின் 90-வது ஜெயந்தி விழா அவர் பிறந்த ரேவதி நட்சத்திர தினமான ஞாயிற்றுக்கிழமை (நேற்று) அவரது சமாதி அமைந்துள்ள ரிஷிகேஷ் ஆசிரமத்தில் நடைபெற்றது.

சுவாமி தயானந்தரின் முதன்மை சீடரும், ஆர்ஷ வித்யா பீடத்தின் துணைத் தலைவருமான சுவாமி சாக்ஷாத்க்ருதானந்த சரஸ்வதி, சுவாமி தயானந்தரின் அதிஷ்டானத்தில் வைதீக முறைப்படி அபிஷேக ஆராதனைகள் செய்தார். ஆர்ஷ வித்யாபீடத்தின் தலைவர் சுவாமி சுத்தானந்த சரஸ்வதியின் மேற்பார்வையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்த கும்பகோணம் அருகில் உள்ள மஞ்சக்குடியில் நேற்றுமுன்தினம் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜைகள்மற்றும் சுவாமி தயானந்த சரஸ்வதி நிகழ்த்திய மிக முக்கிய சொற்பொழிவுகளை www.aimforseva.in என்ற இணையதளத்தின் மூலம் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in