Published : 10 Aug 2020 07:02 AM
Last Updated : 10 Aug 2020 07:02 AM

சென்னையில் கரோனா பரிசோதனை செய்துகொள்வோரில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 7 சதவீதமாக குறைவு

சென்னை

சென்னையில் மாநகராட்சி சார்பில்நாளொன்றுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுவோர் எண்ணிக்கை 14 ஆயிரத்துக்கும் மேல்உயர்ந்துள்ள நிலையில், தொற்றுஉள்ளதாகக் கண்டுபிடிக்கப் படுவோர் எண்ணிக்கை 7 சதவீத மாகக் குறைந்துள்ளது.

சென்னையில் கடந்த ஜூன் 30-ம்தேதி அதிகபட்சமாக 2,393 பேருக்குகரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னையில் கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டன.

ஆகஸ்ட் 8-ம் தேதி நிலவரப்படி ஒரேநாளில் 14,027 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 986 பேருக்கு மட்டுமே, அதாவது பரிசோதனை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கையில் 7 சதவீதம் பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது.

பரிசோதனைகள் அதிகரித்ததன் காரணமாக சென்னையில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

இதுவரை 1 லட்சத்து 8 ஆயிரத்து 124 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 94,100 பேர்(87%) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11,734 பேர் (11%) சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 2,290 பேர் (2.12%) உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 7 லட்சம் பேருக்குமேல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.200 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் மூலம் தொற்று எண்ணிக்கையை இம்மாத இறுதிக்குள் 6 சதவீதமாக குறைக்க திட்டமிட்டிருக்கிறோம். இதை மேலும்குறைக்க வேண்டும் என்ற இலக்கோடு தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x